| -----
அது என்ன குண்டலினி? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தை யை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப் படையான உயி ராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத் தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள். |
| இந்து
மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங் கப்படுகிறது. கடவுளர்களும்
பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள். உண்மையில்
பாம்பு குண்ட லினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற
கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது.
ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள
முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின்
அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு
சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான்
அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும். |
| குண்டலி னியை எழுப்பினால் என்ன செய்ய முடி யும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது. |
| சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உண வாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்து விட்டேன்.) |
| இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக் கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொரு ளாகக் கருத வேண்டுகி றேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ் வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்க ளையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம். |
| முதலில் மூலாதாரம்: இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள் ளது. |
| இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல் பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவ னாக இருப்பான். இந்த மூலா தாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங் களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது. |
| இரண்டாவது சுவாதிஷ்டானம்: இது பிறப்புறுப்புக்கு சற்று மேலா க அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட் டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன் பங்களை அனுபவிக்க நாட்டம் கொள் வான். இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரண மாகச் சொல் லப்படுகிறது. |
| மூன்றாவது மணிப்பூரகம்: இது தொப்புளு க்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது. |
| நான்காவது அனாகதம்:
இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதய த்துக்கு அரு கில் அமைந்துள்ளது. இந்தச்
சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படை ப்பாற்றல் ஆகும். இது காற்று
தத்துவத் தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகி
றார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க
நேர்கிறது.) |
| ஐந்தாவது விசுக்தி: இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்து வது ஆகும்.(ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்த ப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப் பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?) |
| ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை): இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்து ள்ளது. ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமை வது இந்தச் சக்கரம்தான். |
| இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்): இது உச்சந் தலை யில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தரு வது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர் வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹா ரம் தூண்டப் பட்ட நிலையைக் குறிக்கவே.) (சக்கரங் களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்து வத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.) |
| சாதாரண
மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்
பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலே யே
வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார் கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகி றார்கள்.
ஏழு சக்க ரங்களும் தூண்ட ப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம். |
| இந்தக் குண்டலினியின் முக்கிய செயல் பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்க ளைத் தூண்டும் போது மனிதனின் அளப் பறியா ஆற்றல் வெளிப் படுகிறது. |
| அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனு க்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாக வே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சி களும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன் கள், மனம் மற் றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப் பட்டிருக்கின்ற ன. இவ்வாறு கொண்டு வரும் போது புலன் கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடை வதே மனித வாழ்வின் இலட்சி யம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந் தம்?’ என்கிறீர்களா? |
| நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “ நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா? கேட்டிருந் தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையான தா? அப்பதில் முழுமை எனில் உங்க ள் வாழ் வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும் பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவ தில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்று தான் வாழ்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வாழ்வை பரி பூரணமாக உணர்வ தோ வாழ்வதோ இல்லை |
.
(நீங்களும் தான்!!?)
|
| பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப் பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும்
புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவ தில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத்
தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரண மாக்க
முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி
செய்ததுண் டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்பு க்கு
பின்) புரியவில்லை. அப் புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள
முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னு ம் உள்ளதை அறிவதே ஆன்மிகம்.
இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடு
பட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளா கவோ
இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி
உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறும னே நம்ப
முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித்தள்ளத் தான் முடியும். இந்தக்
கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரி பூரணமாக்கும் அரு மருந்தாய் மேற்சொன்ன
புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்திய மே. தேவை
முயற்சி மட்டுமே. அதற் கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகா வும்
தியானமும். சாதார ண வாழ் வுக்கு இது மிகத் தொலைவா னது அல்ல. மிக நெருங்கியதே.
அத்தகைய தொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாண
த்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த் திச் செல்லும். இந்த,
புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையை யே ஆன்ம விடுதலை, ஜீவன்
முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பல வாறாகச் சொல்கிறார்கள். |
சாதரண வாழ்வுக்கு இது நெருங்கி யதே என்று சொல்லியாகி விட் டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ் வில் எதை அடைவ தாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லா வற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொ வொரு செயலும் (கர்மா) செய்ய முடியும். |
| உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம். |
| இந்த
நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத் தோடு
இணைத்து இருப்பதை விரு ம்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து
பயிற்சி பெறுபவர் சமூக த்தில் இருந்தே யோக நிலையை அடையலா ம். இந்த நான்கையும்
கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியா சப்படும். அதற்குதான், “குரு”
என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும்
என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். |
| இந்தத் தருணத்தில் யோகப் பயிற்சியை எளிமையாக வகுத்து, தொகுத்து, உலகு க்கு அளித்த யோகாவின் தந்தையாம் பதஞ்சலி முனியை வணங்கி கட்டுரையை நிறைவு செய்கிறேன்..... |
****Yoga is like Music Rhythm of the Body, The Melody the Mind and Harmony of the Soul, Create the Symphony of the Life****
Monday, June 2, 2014
குண்டலினி சக்தி!!!! அதை எழுப்புவது எப்படி!!!!
யோகாமும் பகவத் கீதையும்!!!!!
| பகவத் கீதை ( இறைவனின் பாடல் ) , யோகா என்ற பதத்தை விரிவாக பல் வேறு வழிகளில் பயன்படுத்துகிறது. இத்தோடு ஒரு பாகம் முழுவதும் (அத்தியாயம் 6)பாரம்பரிய யோகா பயிற்சிகளுக்காக அர்ப்பணித்துள்ளது.[11] மேலும் இதில் மூன்று முக்கிய யோகா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.[12] |
| கர்ம யோகம் : செயல்களின் யோகம். |
| பக்தி யோகம்: அர்ப்பணித்தல் யோகம் |
| ஞான யோகம்: அறிவு யோகம் |
| மதுசூதன சரஸ்வதி (b. circa 1490)கீதையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , முதல் 6 பாகங்ககள் கர்ம யோகமாகவும், நடுவில் 6 பக்தி யோகமாகவும், மற்றும் கடைசி 6 ஞானமாகவும் வகைப்படுத்தியுள்ளார்.[13] பிற வர்ணனையாளர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் வேறுபட்ட யோகாவைக் குறிப்பிட்டு ஆக மொத்தம் 18 மாறுபட்ட யோகாக்களாக வர்ணித்துள்ளனர்.[14] |
| ஆசனம் என்றால் உடலின் நிலை அல்லது தோரணை என்று பொருள். அஷ்டாங்க யோகாசனா செய்ய நான்கு வகையான நிலைகள் உள்ளன. |
பச்சிமோத்தாசனம்!!!!!
| இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள். |
| பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும் |
சிரசாசனம்!!!!
| தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது. |
| பயன்கள்: தினமும்
இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை
சுறுசுறுப்பாகும். |
தணுராசனம்!!!!!
| குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம். |
| பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது. |
யோகாசனம் ஒரு அறிமுகம்!!!!!
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன |
| யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ |
குரு
வணக்கம்:
|
குருவழியே
ஆதி ஆதி
|
| குருமொழியே வேதம் வேதம் |
| குருவிழியே தீபம் தீபம் |
| குருபதமே காப்பு காப்பு |
சத்குரு
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே
மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி
|
புருஷார்த்த
சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
|
| கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி |
என
முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த
யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும்
ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத
சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. யோகம் என்றால் இணைவித்தல், அதாவது,
பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள்.
சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து
செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு,
அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின்
இன்னொரு அர்த்தமாகும்.
|
பதஞ்சலி
யோக சூத்திரம்
|
காலங்காலமாக
நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர்
அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக
சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க
யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.
|
உலகில்
84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம்
வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள்
வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக
முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.
|
யோக
சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்
|
அஷ்டாங்கங்கள்
என்றால் 8 பகுதிகள். அவை
|
1.
யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7.
தியானம்; 8. சமாதி
|
1.
யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள்.
அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம்,
அபரிக்ரஹம் ஆகியவை.
|
அ)
அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.
|
ஆ)
சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே
தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.
|
இ)
அஸ்தேயம் : தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை
பிறருக்காகவும் பயன்படுத்துவது.
|
ஈ)
பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய
நினைப்பது.
|
உ)
அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.
|
சிறு
வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக்
கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
|
மனக்கட்டுப்பாடு
வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.
|
2.
நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை
அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம்,
ஈசுவரப்ராயதானம் என 5 நெறிமுறைகள் அவசியம்.
|
அ)
சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.
|
ஆ)
சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.
|
இ)
தமாஸ் (தபஸ்) : ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி
என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி
இருக்க வேண்டும்.
|
ஈ)
ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.
|
உ)
ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம்
வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற
எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர
அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப்
படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.
|
3.
ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது
நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த
நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும்,
அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும்
வித்தியாசம் உள்ளது.
|
ஆசனம்
- தேகப்பயிற்சி - ஒரு ஒப்புமை:
|
ஆசனம்
|
1. ஒரு
அசைவற்ற நிலை
|
| 2. சக்தியைத் தேக்கிடுவது |
| 3. குறிப்பாக நரம்பு மண்டலத்தைப் பேணுவது |
| 4. உடலுக்கும், மனதுக்கும் பணி ஓய்வு அளிப்பது |
| 5. சுகம். அதாவது, ஆழ்ந்த உடல், மன மகிழ்வுக்கே முக்கியத்துவம் |
| 6. திட உணவுப் பொருளை நம்பியிருப்பதைக் குறைப்பது |
| 7. நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம் |
| 8. தற்சார்வையும், தன்னுள் ஆழ்வதையும் வளர்ப்பது |
| 9. இறையிடம் இட்டுச் செல்லும் நோக்கினால் உருவானது |
| 10. உடலைக் குளிர்விக்கின்றது |
| 11. உடல் உள் உறுப்புகளைப் பிசைந்து விட்டு இயங்க செய்கின்றது |
| 12. நாடி நரம்புகளையும், தசைகளையும் ஒன்றாக இயக்குகிறது |
| 13. இதயத்திற்கு நல்ல ஓய்வு |
| 14. எவ்வயதினரும் செய்யலாம் |
| 15. சக்தி உருவாகும் |
| 16. மனஅழுத்தம் முற்றிலும் நீங்கும் |
தேகப்பயிற்சி
|
1.
அசைவிக்கும் செயல்பாடு
|
| 2. சக்தியைப் பயன்படுத்துவது |
| 3.உடல் தசையமைப்பை மேம்படுத்துவது |
| 4.உடலைப் பணிக்கு தயாரக்கிடுவது |
| 5. கடுமையான பணிகளில் வலி,சிரமத்தை தாங்கிட முக்கியத்துவம் |
| 6. மென்மேலும் திடஉணவை நம்பியிருக்கச் செய்கிறது. |
| 7. நோய்வாய்ப்பட்டிருப்பின் செய்திட இயலாது |
| 8. போட்டிமனப்பான்மையையும் அதனால் பிணக்கையும் கூட்டிடலாம் |
| 9.இகவாழ்வில் நலம்பேணும் நோக்கு |
| 10.உடலை உஷ்ணப்படுத்துகின்றது |
| 11.வெளித்தோற்ற உறுப்புக்கு மட்டுமே பயன் தருவது |
| 12.உடலின் புறத்தசைகளை மட்டுமே இயங்கச் செய்கின்றது |
| 13.இதயத்தில் இரத்தஓட்டம் மிகுந்து வேகமாக துடிக்க வைக்கும் |
| 14.முதியோர் செய்யக்கூடாது |
| 15.சக்தி விரயமாகும் |
| 16.மனஅழுத்தம் மிகும் |
ஆசனம்
பழகலில் நியதிகள் சில: நரம்புகள் பாதிக்கப்பட்ட
நோயுடையவர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, நெடு நாட்களாக உடலில் ஏதாவது
உறுப்புகளில் புண் மற்றும் தோலில் நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள், உடலில்
ஏதேனும் ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பயிற்சி ஆசிரியரின்
ஆலோசனையின்றி எந்த ஆசனமும் செய்தல் கூடாது. குறிப்பாக புத்தகங்களை படித்து
அதன்படி செய்து பழகுவதும் கூடாது. முதன் முதலாகப் பயிலும்போது, புத்தகங்களை
அல்லது பிரசங்கங்களை மட்டும் ஆதாரமாக்கி ஆசனங்களைத் தாமாகச் செய்வதைத்
தவிர்க்கவும். துவக்கத்தில் சில நாட்களாவது, அன்றாடம், சிறிது நேரமாயினும்,
யோகாசனம் கற்பிப்பவரிடம் பயில்வதே நல்லது. பின்னர், ஒவ்வொரு ஆசனம் செய்வதிலும்
தேர்ச்சி பெறுவதற்கு வீட்டிலேயே, அவரவர்களே பழகிவிடலாம்.
|
ஆசனம்
பயிலவும், பழகவும் காலை நேரமே உகந்தது. இயன்றவரை, மலஜலம் கழித்து, நீராடிய பின்
செய்தல் மேன்மை, இரவுப் - பணி (நைட் - ஷிப்ட்) உடையவர்கள், கண்விழிப்பாலும்,
பணியாலும் ஒய்ந்து போயிருக்கையில், காலைக்குப் பதிலாக மாலை நேரம் செய்யலாம்.
எனினும், மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும் மாலை ஆசனம் பழகும் நேரத்துக்கும் 4 மணி
நேரமாவது இடைவெளி அவசியம். வயிற்றில் ஜீரணிக்கப்பட வேண்டியது இருக்கையில் ஆசனம்
செய்தல் கூடாது. காபி, டீ, திரவம் தானே என்று அவற்றை அருந்திய உடனும் ஆசனம்
செய்தல் கூடாது. உண்மையில், திடமான சாப்பாடு, டிபனை விட, காபி, டீ போன்றவற்றையே
ஜீரணிக்கப்பட அதிக நேரம் பிடிக்கின்றன.
|
காற்றோட்டமுள்ள
இடம் நல்லது. கை, கால், மற்றும் உடலை நீட்டித் திருப்பி வளைப்பதைத் தடுக்காத
தளர்வான உடையே நல்லது. இறுக்கமான உடையைத் தவிர்க்கவும். ஆசனங்களை, சற்று கனமான
விரிப்பின் மேல் செய்வது நல்லது. கை, கால் உடம்பின் அசைவு மிக மிக
மெதுவாகவே இருக்க வேண்டும். தினமும் எல்லா ஆசனங்களையும் செய்வதை
விட, அவசரமின்றி சிலவற்றை செய்வதே நல்லது.தலை, கழுத்துப்பகுதி, மார்பு, வயிறு,
முதுகு, கைகால்கள் அனைத்து உடல் பகுதிகளும் உட்படுத்திய ஆசனமோ அல்லது
குறிப்பிட்ட தனி உறுப்புகளுக்கோ பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு
உடலுறுப்பும் விறைப்பின்றி, தளர்த்திய நிலையிலும் மென்மையாகவும், நிதானமாகவும்,
மிக இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும். பரபரப்பில்லாத மனநிலைக்கு
மாறிக்கொள்ள வேண்டும்.
|
யோக
சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில் சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம்
ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. சாத்வீக உணவில் பழங்கள், பச்சைக்
காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, இலையுணவு, பால், தயிர், உலர்ந்த பழங்கள்,
தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானிய உணவுகள் அடங்கும். எந்த ஆசனமாயினும்,
உடலை ஒருநிலைப்படுத்தும் போது, இரண்டு முக்கிய செய்திகளை மறந்திடக் கூடாது.
|
1.
அசைவின்மை: எவ்வளவு நொடிகள் அல்லது நிமிடங்கள்
உடல் உறுப்புக்கள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில்
இருந்தால் போதும். மிகச் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம். நாள்
செல்லச் செல்ல அசைவு குறைந்து நின்று விடும்.
|
2.
சுகம்: ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு
ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை
அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற
மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம்
எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை
ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.
|
பெண்களுக்கான
சில செய்திகள் : ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால்,
பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு
வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள
வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட
முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை
பின்பற்றுகின்றனர். இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும்
பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும்,
கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப
ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும்உடைய
ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று
தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப்
பிள்ளையின் நிலையும் பேணப்படும்.
|
பிராணயாமம்
|
பிராண
சக்தி : பிராணயாமம் உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும்.
உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி
பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை.
|
பந்தங்கள்
: பிராணனைத் தேவைப்படும் போது தேவைப்படும் இடத்தில்
வைக்க, அல்லது தடுத்து மாற்றிடங்களுக்குப் பரவச் செய்ய பந்தங்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
|
முத்திரைகள்
: பல முத்திரைகள் ஆசனங்களோடு இணைந்ததாகவே இருக்கின்றன.
உடலையும், கை விரல்களையும் குறிப்பிட்ட வகையில் வடிவமைத்துக் கொண்டு இணைப்பது
முத்திரையாகும். ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகளை முறையே கற்காமல் நேரடியாக
பிராணயாமத்திற்குச் செல்வது தவறாகும். உள நோயும், உடல் நோயும் வராதிருக்க மனம்
அமைதியுற பிராணசக்தி, ஜீவசக்தி இத்தூல சரீரத்தில் பெருக, தொடர்ந்து ஜபம், தவம்
செய்வோம். மன ஆற்றலுக்கு யோகமும் உடலாற்றலுக்கு ஆசனமும் எனப் புதிய இருவினை
செய்வோம். இன்புறுவோம்.
|
அர்த்தமுள்ள
யோகம் + ஆசனம்
|
யோகம்
ஆசனம்
|
உளவியல்
உடலியல்
|
| அகத்தூய்மை புறத்தூய்மை |
| புலன் கட்டுக்கோப்பு உடலாற்றல் மேம்பாடு |
| மனஆற்றல் உட்சுரப்பிகள் உயிர்ப்பித்த |
| நினைவாற்றல் செயலாற்றல் துலக்கம் |
| உணர்வாற்றல் வளர்சிதைமாற்ற செயல்பாடு |
தியானம்
பிராணயாமம்
|
ஆழ்
மனத்தடவியல்
உயிரியல்
|
| நீள் நினைவு நோற்றல் உயிர் பரவல் |
| அறிவு வடிவு உயிர்க்காற்றின் உலாஆத்மா தரிசனம் உயிர்க்காற்றின் உலா |
| ஆன்ம நிவேதனம் உலகுயிர் உடலுயிர் ஒற்றுமை |
யோகாசனம்
பழகுவதற்கு இங்கு சில முக்கிய ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
|
இது
தவிர இன்னும் பல ஆசனங்களையும் கற்றுப் பழகிட முயலவும். முக்கிய ஆசனங்கள் என்பது
பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் தேக நலன் பராமரிக்க, வேறு சில
ஆசனங்கள் மேலும் முக்கியமாக, அவசியமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தத்தமக்கு
உகந்ததை தவறாமல் செய்து நன்மை பெறவும். ஆசனங்கள் செய்யும் முன்பும், செய்திடும்
போதும் அவசரப்படாது இருப்பது போலவே, செய்த பின்னரும் சில நிமிடங்களாவது
அமைதியாக, வேறு பணியில் ஈடுபடாமல், இறைவனை தியானித்திருப்பது நல்லது. குறிப்பாக
உடனே குளிப்பதையும், திரவ உணவையும் கூட தவிர்க்கவும்.
|
நன்றி:
|
டி.எஸ்.கிருஷ்ணன்,
|
யோகாசன முறைகள்!!!!
பிரார்த்தனை- 1 நிமிடம் |
| தயார் நிலை பயிற்சிகள்: |
| "உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்" 3 நிமிடங்கள் |
| ஆசனங்கள்: |
| சூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள் |
| நின்று செய்யும் ஆசனங்கள்: |
| தாளாசனம் - 1/2 நிமிடம் |
| உட்கட்டாசனம் - 1 நிமிடம் |
| அர்த்த சக்ராசனம் - 1 நிமிடம் |
| பாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம் |
| அர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம் |
| திரிகோணாசனம் - 1 நிமிடம் |
| "பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)" - நிமிடம் |
| ஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம் |
| அர்த்த சிராசனம் - 1 நிமிடம் |
| சக்ராசனம் - 1நிமிடம் |
| பர்வத ஆசனம் - 1 நிமிடம் |
| உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்: |
| வஜ்ராசனம் - 1 நிமிடம் |
| உஷ்த்ராசனம் - 1/2 நிமிடம் |
| வஜ்ர முத்ரா - 1 நிமிடம் |
| சுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம் |
| பஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம் |
| சித்த பத்மாசனம் - 1 நிமிடம் |
| பர்வதாசனம் (மலை)- 1 நிமிடம் |
| யோக முத்ரா - 1 நிமிடம் |
| கோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம் |
| வக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம் |
| அர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம் |
| ஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம் |
| அமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம் |
| குதபாத ஆசனம் - 1 நிமிடம் |
| படுத்து செய்யும் ஆசனங்கள்: |
| புஜங்காசனம் - 1 நிமிடம் |
| சலபாசனம் - 1 நிமிடம் |
| தனுராசனம் - 1 நிமிடம் |
| உத்தன பாதாசனம் - 1/2 நிமிடம் |
| சர்வாங்கசனம் - 3 நிமிடங்கள் |
| மச்சாசனம் - 1 நிமிடம் |
| பவன முக்தாசனம் - 1 நிமிடம் |
| விபரீத கரணி - 1/2 நிமிடம் |
| ஹலாசனம் - 1 நிமிடம் |
| பத்ம சிங்காசனம் -1 நிமிடம் |
| கூர்மாசனம் - 1 நிமிடம் |
| அர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம் |
| யோக நித்ராசனம் - 1 நிமிடம் |
| பத்ம சயனாசம் - 1 நிமிடம் |
| புஜபாத பீடாசனம்- 1 நிமிடம் |
| உடல் தளர்வு பயிற்சி: |
| சாந்தியாசனம் - 10 நிமிடங்கள் |
| பிராணயாமம் |
| கபாலபதி - 1 நிமிடம் |
| சுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்- 3 நிமிடங்கள் |
| நாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள் |
| தியானம் - 10 நிமிடங்கள் |
| பிரார்த்தனை - 1 நிமிடம். |
யோகாசனம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள்!!!!!
பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம். சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம். |
ஒவ்வொருவரும்
அவரவர் உடல் தேவைக்கேற்றவாறு உண்ணப் பழக வேண்டும். உணவை நன்கு மென்று கூழாக்கி,
எச்சில் கலந்து மெதுவாக உண்ண வேண்டும். உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு
நீரருந்தலாம். உண்டு அரை மணி நேரம் பின்பே நீரருந்த வேண்டும். பழ உணவருந்தி
பின்பு உண்ணலாம். காபி, தேநீர், மற்றும் குளிர்பானங்கள் அறவே கூடாது. உப்பு,
புளி, மிளகாய், எண்ணெய், நெய், பால் பொருட்கள் மிகக்குறைந்த அளவில் உண்ண
வேண்டும். இரவு படுப்பதற்கு இரண்டு அரைமணி நேரத்திற்கு முன்பு உணவை முடித்து விட
வேண்டும். வெள்ளைச் சீனி, உப்பு, மைதா மாவுப் பொருட்கள் ஆகியவை மிக்க தீங்கு
விளைவிக்கும் பொருட்கள். (த்ரீ டேன்ஜரஸ் ஒயிட்) பழ வகைகளில்; பிஞ்சுக்காய்,
நன்கு பழுத்த பழம் உண்ணலாம். உணவு வகைகளினை மிகக் குறைவாகவோ, வயிறு முழுவதும்
நிரம்பும் வகையிலோ உண்ண வேண்டாம். நன்கு பசித்த பின் புசிக்கலாம். தினம் ஒரு
கீரை உண்ணவும். உணவில் அவல், சத்து மிகுந்த தானிய பொருட்களை அதிகமாக சேர்த்துக்
கொள்ளலாம். இரு உணவுகளுக்கு இடையில் குறைந்த பட்சம் 4 மணி நேர இடைவெளி
விடவேண்டும். நொறுக்குதீனி நம் ஆயுளை குறைக்கும். கொட்டையுணவு (முந்திரி பிஸ்தா,
பாதாம், தேங்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் (கிஸ்மிஸ், அத்தி, பேரிச்சம்பழம்)
அவசியம் உணவில் இடம் பெற வேண்டும். தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில்
சமைத்தால் கொலஸ்ட்ராலைக் கூட்டி நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
மலக்குடல் சுத்தமடைய நிறைய நீர் அருந்தி, நார்ச்சத்து உணவு உண்ண வேண்டும்.
தாகமெடுத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது எனப் பொருள். எனவே 3 முதல் 4
லிட்டர் வரை நீர் தினமும் குடிக்க வேண்டும். தினம் காலை காரட் சாறு, பீட்ரூட்
சாறு, கொத்தமல்லிச்சாறு, கீரைச்சாறு, மூலிகைச்சாறு ஆகியவற்றில் ஏதாவதொன்றை
அருந்தலாம். மதிய உணவில் அல்லது பாதி சமைத்த காய்கறி கலவை கண்டிப்பாக சேர்த்துக்
கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை இரவு வேளை உணவைத் தவிர்த்து உண்ணா
நோன்பிருக்கலாம்.
|
மாதம்
ஒருமுறை பழச்சாறு மட்டும் அருந்தி உண்ணா நோன்பிருக்கலாம். பெரும்பான்மையான அசைவ
உணவு நச்சுப்பொருள் மிகுந்த உணவாகையால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலை
படுக்கையினை விட்டு எழுந்தவுடன் முழங்காலிட்டு அமர்ந்து 1 முதல் 2 குவளை மிதமான
சூடுடைய நீரையோ அல்லது குளிர்ந்த நீரையோ பருக வேண்டும். டி.வி. பார்த்து
கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ சாப்பிடக் கூடாது. தினமும்
இருமுறை மலக்குடலில் சேரும் கழிவுப்பொருட்களை வெளிப்படுத்திப் பழக வேண்டும். மிக
மெல்லிய தலையணை வைத்து உறங்க வேண்டும். தினமும் அதிகாலை காலாற 30 முதல் 45
நிமிடங்கள் வரை நடக்கவும். இதனை எந்த வயதினரும் (10 வயதினருக்கு மேல்) பயிற்சி
எடுத்துக் கொள்ளலாம். இரவு உண்ட பின்பு 15 முதல் 20 நிமிடம் வரை உலாவவும்.
பதப்படுத்தப்பட்ட உணவு, கலப்பட உணவு, சுவையூட்டப்பட்ட உணவு, சிந்தெடிக் ரகங்கள்
முதலியவைகளை அறவே நீக்க வேண்டும். மனம் சாந்தமாக இல்லாத போதோ, கவலையாக இருக்கும்
போதோ, பசி இல்லாமல் இருக்கும் போதோ உணவருந்தக் கூடாது. அதிக உஷ்ணம், அதிக குளிர்
ஏற்றப்பட்ட பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். முகச்சாயம், உதட்டுச்
சாயம், சில்க் போன்ற துணிகள், ரசாயனம் அதிகமுடையவைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
உணவருந்தும் போது நீர் பருகக்கூடாது. இரவில் நேரம் தாமதமாக உணவருந்தக் கூடாது.
இரவில் அதிக உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது.கலந்து வாய் கொப்பளிக்கவும், தினமும்
வாயின் மேற்சுவரிலுள்ள அசுத்தங்களை அகற்றி விடவும். காலை, மாலை இருவேளையும்
கண்களை குளிர்ந்த நீரில் கழுவவும்.காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவிய பிறகே
பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தோலோடு உண்ணப்
பழகவும். தினமும் சில நிமிடங்கள் பாட்டிலும், சிரிப்பிலும் மனதை
ஈடுபடுத்துங்கள். தொலைக்காட்சிப் பெட்டிக்கும், உங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட
தூரத்தை நிர்ணயித்து அமரவும். அதிக நேரம் பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும்.
|
யோகத்தில்
ஆசனத்திற்குப் பின்னுள்ள பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) பிரத்யாகாரம்
(நிலையற்றவைகளை எல்லாம் துறத்தல்) தாரணம் (நிலையான உண்மைப் பொருளைப் பற்றிடம்)
தியானம் (பற்றியதை விடாமல் எண்ணுதல்) ஆகியவற்றிலும் படிப்படியாக முன்னேறி
சமாதியும் (ஆண்டவனுள் ஆழ்ந்து விடல்) கூடிட இறையருளை நாடிடுவோம்.
|
இயம
நியமமே எண்ணிலா ஆதனம்
|
| நயமுறு பிராணயாமம் பிரத்தியாகாரஞ் |
| சயமிகு தாரணை தியானஞ்ச்சமாதி |
| அயமுறும் அட்டாங்கமாவது யோகமே |
-திருமூலர்.
|
சூரிய நமஸ்காரம்!!!!!!
எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும் ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி அளிக்கும் படைப்பாகும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம் செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். |
தாளாசனம்!!!!!
மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்
|
மூச்சின்
கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு,
ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
|
உடல்
ரீதியான பலன்கள் :நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம்
சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.
நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
|
குணமாகும்
நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
|
ஆன்மீக
பலன்கள் : மனம் ஒருமைப்படும்
|
எச்சரிக்கை
: குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது ....
|
உட்கட்டாசனம்!!!!!!
மனம் : முழங்கால்கள் |
மூச்சின்
கவனம் : இயல்பான மூச்சு
|
உடல்
ரீதியான பலன்கள் : பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு
நிமிடம் செய்தால்
4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும்.
|
குணமாகும்
நோய்கள் : மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி,
முழங்கால் வலி,
குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள்
நீங்கும்.
|
ஆன்மீக
பலன்கள் : குண்டலினி சக்தியினை எழுப்பும்.
|
அர்த்த சக்ராசனம்!!!!
| மனம் : முதுகெலும்பு |
மூச்சின்
கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின்
போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
|
உடல்
ரீதியான பலன்கள் :உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால்
தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன.
முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை
பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச
உறுப்புகள் ஓய்வடைகின்றன.
|
குணமாகும்
நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன.
தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.
|
ஆன்மீக
பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை
அதிகரிக்கின்றது.
|
எச்சரிக்கை
: இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும்.
மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும்.
அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு
தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
|
பத்ம ஹஸ்தாஸனம்!!!!!!
| மனம் : வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள் |
மூச்சின்
கவனம் : கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின்
போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
|
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு
தொடையில் உள்ள எலும்பைப் பிணைக்கும் தசை நார்கள், தசையைப் பிணைக்கும் தசை
நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப்படுகின்றன. முதுகுத்தண்டு மற்றும்
இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம்
அதிகரிக்கிறது. ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. உடலின் சுற்றளவைக்
குறைக்கிறது. இடுப்பு மற்றும் இடுப்புக்குக் கீழ் உள்ள அதிக சதைப்பகுதியினை
மெலிய வைக்கிறது.
|
குணமாகும்
நோய்கள் : ஜீரண சம்பந்தமான இரைப்பை, மற்றும் குடல்
சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது.
கல்லீரலின் இயக்கம் சீராகிறது.
|
ஆன்மீக
பலன்கள் : படர் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு
இரத்தம் பாய்வது உணரப்படுகிறது.
|
எச்சரிக்கை
: அதிக இரத்தஅழுத்தம் அல்லது இதயநோய் உள்ளவர்கள்,
கழுத்துவலி இடுப்புபிடிப்பு உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது
|
அர்த்தகடி சக்ராசனம்!!!!!!
| மனம் : இடுப்பு பகுதி |
மூச்சின்
கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும்
போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
|
உடல்
ரீதியான பலன்கள் :முதுகுத்தண்டின் வளையும் தன்மை
அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம்
அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. நுரையீரல்கள்
கொள்ளளவு அதிகரித்து இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகின்றது.
பாதத்திற்கு நல்லது.
|
குணமாகும்
நோய்கள் : முதுகுவலியில் இருந்து நிவாரணம்
கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.
|
ஆன்மீக
பலன்கள் : பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது.
ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது.
|
சக்ராசனம்!!!!!
| விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, மூக்கு, இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரைவட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும், 15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஓய்வு எடுத்து கொள்ளவும். இதே போல இருமுறை இந்த ஆசனத்தை பயிலலாம். |
பலன்: உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த ஓட்டம்
பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த
ஆசனத்தை கவனமாக கையாளவும்.
|
பர்வதாசனம்!!!!!
| தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலை வலி, கண்நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக்கூடாது. |
பலன்
: தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல்
பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். கண்பார்வை
சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.
|
உஷ்டிராசனம்!!!!!
| விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும். வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும். இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம். முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும். |
மனம்
: இடுப்பு பகுதி மற்றும் கழுத்து
|
மூச்சின்
கவனம்: வளையும் போது வெளி மூச்சு, நிமிரும் போது
உள்மூச்சு
|
உடல்
ரீதியான பலன்கள்: முதுகுத் தண்டின் வளையும் தன்மையும்
மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள்
பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன.
|
குணமாகும்
நோய்கள்: முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால்
வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை
கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது. தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை
நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.
|
எச்சரிக்கை: இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு
நோயுள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
|
Subscribe to:
Comments (Atom)



























